ஞாயிறு, 16 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 7 அக்டோபர் 2025 (13:37 IST)

நான்கு நாட்களில் 335 கோடி ரூபாய் வசூல்… பிளாக்பஸ்டர் காந்தாரா !

நான்கு நாட்களில் 335 கோடி ரூபாய் வசூல்… பிளாக்பஸ்டர் காந்தாரா !
சுமார் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கன்னட மொழியில் உருவானா ‘காந்தாரா’ திரைப்படம் இந்திய அளவில் பேன் இந்தியா ஹிட் ஆகி 400 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூலித்தது. அதையடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது அதன் இரண்டாம் பாகம் ‘காந்தாரா -1’ ரிலீஸாகியுள்ளது.

காந்தாரா கதைக்களம் நடக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் இந்த பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது.  முதல் பாகத்தின் வெற்றி காரணமாக சுமார் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த பாகம் உருவாக்கப்பட்டு பேன் இந்தியா ரிலிஸாக நேற்று ரிலீஸானது. ரிலீஸுக்கு முன்பே இந்தியா முழுவதும் பல நகரங்களில் பிரீமியர் காட்சிகள் திரையிடப்பட்டன.

அதில் நேர்மறையான விமர்சனங்கள் வரத் தொடங்கியதை அடுத்து வசூலில் கலக்கிக் கொண்டிருக்கிறது ‘காந்தாரா 1’. நான்கு நாட்களில் உலகளவில் சுமார் 335 கோடி ரூபாய் அளவுக்கு இந்த படம் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வசூல் அதிகளவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.