1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Kantara 2 releasing issue in kerala

அதிக பங்குத்தொகைக் கேட்கும் பிரித்விராஜ்.. கேரளாவில் காந்தாரா 2 வெளியாவதில் சிக்கல்!

காந்தாரா
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகம் என சொன்னாலும் காந்தாரா கதையின் முன்கதைதான் படமாக்குகிறார்கள்.

படத்துக்கு காந்தாரா –சேப்டர் 1 எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி பேசிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம். இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியிருந்தார். இதன் ஷூட்டிங் ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்த நிலையில் சமீபத்தில் நிறைவுற்றது. படம் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த படம் பேன் இந்தியா அளவில் ரிலீஸாகும் நிலையில் மலையாளத்தில் பிரித்விராஜ் வாங்கி வெளியிடுகிறார். பிற மொழிப் படங்கள் கேரளாவில் ரிலீஸாகும் போது அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் 50 சதவீதம்தான் விநியோகஸ்தருக்குப் பங்குத் தொகையாக தருவார்கள். ஆனால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதால் பிரித்விராஜ் 55 சதவீதம் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மறுப்புத் தெரிவிக்கவே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதனால் கேரளாவில் காந்தாரா 2 ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலைத் தொட்ட மதராஸி..!