என்னால் சிறையில் இருக்க முடியவில்லை.. எனக்கு விஷம் கொடுங்கள்: நீதிமன்றத்தில் பிரபல நடிகர்..!
ரசிகர் ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கைதாகியுள்ள பிரபல கன்னட நடிகர் தர்ஷன், நீதிமன்றத்தில் தனக்கு "விஷம்" கொடுக்குமாறு கோரியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரேணுகா சுவாமி கொலை வழக்கு தொடர்பாக நகர சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் தர்ஷன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தனது கைகளில் பூஞ்சை தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், பல நாட்களாக சிறையில் வெளியுலகத்தை காண அனுமதிக்கப்படாததால் சூரிய ஒளியைப் பார்க்கவில்லை என்றும் கூறினார். தனது உடைகள் துர்நாற்றம் வீசுவதாகவும், சிறையில் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் முறையிட்டார். இதன் பின்னர், நீதிபதியிடம் "எனக்கு விஷம் கொடுங்கள்" என்று கோரியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக, விசாரணை வரும் செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா மற்றும் பலருடன் சேர்ந்து, தனது ரசிகரான 33 வயதான ரேணுகா சுவாமியை கடத்தி, சித்திரவதை செய்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரேணுகா சுவாமி, பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது.
Edited by Siva