அழைப்பை மறுத்த ஆண்ட்ரியா: கடுப்பான கமல்


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (16:11 IST)
தனது அழைப்பை மறுத்த ஆண்ட்ரியா மீது நடிகர் கமலஹாசன் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

 
கடந்த 2013ஆம் ஆண்டு, கமலின் விஸ்வரூபம் திரைப்படம் வெளியானது. இதில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட கமல் திட்டமிட்டிருந்தார். 
 
ஆனால் பணப் பிரச்னை காரணமாக இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதற்கிடையில் நடிகர் கமல் உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் ஆகிய படங்களில் நடித்தார். இவை அனைத்தும் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் பணிகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டார்.
 
இதில் ஆண்டிரியா நடித்த காட்சிகள் திருப்தி அளிக்காததால், மீண்டும் ஒருமுறை எடுக்க முடிவு செய்தார். இதற்காக ஆண்டிரியாவை அழைத்தால், அவர் மீண்டும் வந்து நடிக்க முடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கமல் ஆண்டிரியா மீது கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :