கல்கி 2 திரைப்படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. அவருக்கு பதில் தமிழ் நடிகையா?
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 AD' திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தின் முதல் பாகத்தில் நாயகியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். தற்போது இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோன் நீக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு பதிலாக நடிகை சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக தீபிகா படுகோன் சில நிபந்தனைகளை விதித்ததாகவும், அதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே படக்குழு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
தீபிகா படுகோன் ஏற்று நடித்திருந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள சாய் பல்லவி, இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் இணைந்தால் அது படத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெலுங்குத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Edited by Siva
