கலையரசன் நடிக்கும் அதே கண்கள்

கலையரசன் நடிக்கும் அதே கண்கள்

Sasikala| Last Updated: திங்கள், 12 செப்டம்பர் 2016 (21:58 IST)
தமிழ் த்ரில்லர் படங்களில் முக்கியமானது, திருலோகச்சந்தர் இயக்கத்தில் ரவிச்சந்திரன் நடித்த, அதே கண்கள். அந்தப் படத்தின் பெயரை கலையரசன் நடிக்கும் படத்துக்கு வைத்துள்ளனர்.

 
ரோஹின் வெங்கடேசன் என்ற அறிமுக இயக்குனர் படத்தில் கலையரசன், ஜனனி, ஷிவதா நடிக்கின்றனர். சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் படத்தை தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார்.
 
இந்தப் படத்துக்கு அதே கண்கள் பெயர் பொருத்தமாக இருக்கும் என்பதால், முறைப்படி அனுமதி வாங்கி தங்கள் படத்துக்கு வைத்துள்ளனர். சி.வி.குமாரின் மாயவன் படம் வெளியான பிறகு அதே கண்கள் திரைக்கு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :