செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Lenin Ak
Last Modified: திங்கள், 6 அக்டோபர் 2014 (14:03 IST)

காக்கா முட்டை மணிகண்டனின் குற்றமும் தண்டனையும்

ரஷ்ய நாவலாசிரியர் பியோதர் தாஸ்தாயெவ்ஸ்கியின் புகழ்பெற்ற நாவல் குற்றமும் தண்டனையும். இதேபோலொரு புதினம் இன்றுவரை உலகில் எழுதப்பட்டதில்லை எனலாம். இதேபெயரில் அதிக படங்கள் உலகில் தயாராகியுள்ளன. நாவலையே படமாக்கியுமுள்ளனர்.

 
தமிழிலும் குற்றமும் தண்டனையும் என்ற பெயரில் ஒரு படம் டிசம்பரில் தொடங்கப்படுகிறது. இதனை இயக்குகிறவர் காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன். இவரது காக்கா முட்டை சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டையும், விருதுகளையும் பெற்று வருகிறது. ஆனால் படம் இன்னும் திரையரங்கில் வெளியாகவில்லை.
 
இந்நிலையில் விதார்த் நடிப்பில் குற்றமும் தண்டனையும் படத்தை அறிவித்துள்ளார். இந்தப் படத்தை விதார்த்தே தயாரிக்கிறார்.
 
டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது.