கபாலி வெயிட்டை குறைக்கிறேன் - ஜான் விஜய்


Sasikala| Last Modified வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (10:54 IST)
கபாலியில் கபாலி என்ற டானின் வலது கையாக நடித்த ஜான் விஜய், வீர சிவாஜி படத்தில் ஸ்டைலிஷ் டானாக நடித்துள்ளார். ஒரே படத்தில் டான் உதவியாளரிலிருந்து டானாக பிரமோஷன்.

 


இந்தப் படத்துக்காக தனது தோற்றம் மற்றும் காஸ்ட்யூம் விஷயங்களில் நிறைய மெனக்கெட்டுள்ளார்.
 
தற்போது ஓய்வில் இருப்பவர் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். ஏன்?
 
கபாலி படத்தின் கதாபாத்திரத்துக்காக உடல் எடையை அதிகரித்தாராம். அந்த எக்ஸ்ட்ரா லக்கேஜை குறைப்பதற்காகத்தான் இந்த உடற்பயிற்சி. தவிர, தனது புதிய படங்களில் சிக்கென்று காட்சித்தர வேண்டும் என்பதில் ஜான் விஜய் உறுதியாக இருக்கிறாராம். அசத்துங்க.


இதில் மேலும் படிக்கவும் :