"காத்துவாக்குல ரெண்டு காதல்" ஸ்வாரஸ்யமான ஷூட்டிங் அப்டேட் இதோ!

Papiksha Joseph| Last Updated: வெள்ளி, 22 மே 2020 (13:08 IST)

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தை
7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் தயாரிக்கிறார்.


இரண்டு பிரபல நாயகிகளை கொண்ட காதல் கதை என்பதால் இப்படம் நிச்சயம் ஸ்வாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி காதலர் தினத்தன்று இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கணவனத்தை ஈர்த்தது. நானும் ரௌடி தான் படத்திற்கு பிறகு மீண்டும் அதே கூட்டணியில் ஒரு வித்தியாசமான காதல் கதை இயக்கும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு அத்தனை வேலைகளையும் முடக்கிவிட்டது. இதையடுத்து தற்போது கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் படப்பிடிப்பு வேலைகள் மீண்டும் ஆரம்பித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை 7 screen studio நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். அதாவது, வருகிற ஆகஸ்ட் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :