வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 நவம்பர் 2016 (12:57 IST)

சூர்யாவுடன் நடிக்க தயார்: மனைவி ஜோதிகா அறிவிப்பு

சூர்யாவுடன் இணைந்து நடிக்க தயாராக இருப்பதாக ஜோதிகா தெரிவித்துள்ளார்.


 
 
தமிழில் ‘வாலி’ படம் மூலம் அறிமுகமானார் நடிகை ஜோதிகா. பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, பின்னர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.
 
ஜோதிகா ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். 36 வயதினிலே படமும் ஹிட்டானது.
 
இந்நிலையில் தற்போது ஜோதிகா பிரம்மா இயக்கத்தில் ‘’மகளிர் மட்டும்’’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யா, ஜோதிகாவை மீண்டும் திரையில் சேர்த்து வைத்துப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 
 
ஜோதிகா மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டாலும் சூர்யாவுடன் அவர் நடிப்பதாக தெரியவில்லை. தற்போது ஜோதிகா, சூர்யாவுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆசை உள்ளது. என் கேரக்டருக்கு ஏற்ற மாதிரி ஒரு நல்ல கதை கிடைத்தால் கட்டாயம் சூர்யாவுடன் இணைந்து நடிப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.