வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 27 மே 2016 (18:23 IST)

ஹாலிவுட் திரைக்கதையாசிரியருடன் கைகோர்க்கும் ஏ.எல்.விஜய்

ஹாலிவுட் திரைக்கதையாசிரியருடன் கைகோர்க்கும் ஏ.எல்.விஜய்

பிரபுதேவா, தமன்னா நடிக்கும் படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஜுன் முதல் வாரத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.


 
 
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது. தமிழில் காந்தா என்றும், தெலுங்கில் அபிநேத்ரி என்றும் பெயர் வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தமிழ்ப் பெயர் காந்தா அல்ல தேவி என்று விளக்கமளித்துள்ளனர். இதுவொரு ஹாரர் திரைப்படம்.
 
மிர்ரகிள் ஒர்க்கர் ஹாலிவுட் படத்தை இயக்கிய பிரபல திரைக்கதையாசிரியர் பால் ஆரோனுடன் சேர்ந்து தேவி படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார் விஜய். சர்வதேச சப்ஜெக்ட் என்பதால் பால் ஆரோனையும் உடன் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
 
மூன்று மொழிகளில் தயாராகும் படம் என்பதால் ஒவ்வொரு மொழியிலிருந்தும் தலா ஒரு இசையமைப்பாளர் என்று மூன்று இசையமைப்பாளர்களை பயன்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.