பாலிவுட் நடிகைகள் மறுத்தால் என்ன; இப்போ ஒரு ஆல்ரவுண்டர் சிக்கியாச்சு


Cauveri Manickam| Last Modified புதன், 17 மே 2017 (18:02 IST)
அண்மையில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிப் பெற்ற சரித்திர பட நாயகனுடன் ஜோடி சேர பாலிவுட் நடிகைகள் மறுப்பு தெரிவித்த நிலையில் தெலுங்கு, தமிழ்,ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்த ஹீரோயினை தேர்வு செய்துள்ளார்களாம்.

 
 
இந்தச் செய்தியைக் கேட்டதும், மேலே உள்ள பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் வெளியான பிரமாண்டமான படத்தின் நாயகன் அடுத்து நடிக்கும் படத்திற்கு ஹீரோயின் தேடினார்கள். அந்தப் படம் மூன்று மொழிகளில் தயாராவதால், பாலிவுட் ஹீரோயினாக இருந்தால் தான் எல்லோருக்கும் தெரியும் என்று நினைத்தனர். ஆனால், ஒரு பாலிவுட் ஹீரோயின் கூட அவருடன் நடிக்க முன்வரவில்லை.
 
இதனால், மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் ஜோடிபோட்ட மும்பை நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர். தமிழில் அறிமுகமான இவர், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் நடித்துள்ளார். மூன்று மொழிகளுக்கும் தெரிந்த முகமாக இருப்பதால், பரவாயில்லை என்று அந்த நடிகையையே ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :