நயன்தாராவின் காதலராக நடிக்கும் ஜே.டி.சக்ரவர்த்தி

Mahalakshmi| Last Modified வியாழன், 5 மார்ச் 2015 (09:15 IST)
வர்மாவின் சத்யா படத்தில் நடித்த ஜே.டி.சக்ரவர்த்தி நயன்தாராவின் காதலராக தற்போது நடித்து வருகிறார்.
சக்ரவர்த்தி எத்தனை படங்கள் நடித்தாலும் சத்யா சக்ரவர்த்தி என்றால்தான் சட்டென்று புரிந்து கொள்கிறார்கள். இவர் மலையாளத்தில் கடைசியாக நடித்த படம், என்னோடிஷ்டம் கூடாமோ. 1992 -இல் வெளிவந்தது.
 
அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது சித்திக்கின், பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நடிக்கிறார். மம்முட்டி, நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தில் சக்ரவர்த்தி நயன்தாராவின் காதலராக வருகிறாராம்.
 
பாஸ்கர் தி ராஸ்கலுக்கு முன் நயன்தாரா நடித்த பாடிகாட் மலையாளப் படத்தையும் சித்திக் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :