ஜெயலலிதா முதல்வராக பிரச்சாரம் செய்வேன்

ஜெயலலிதா முதல்வராக பிரச்சாரம் செய்வேன்


Sasikala| Last Modified செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (12:04 IST)
நடிகை நமிதா இப்போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ உறுப்பினர். திருச்சியில் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பிரச்சாரம் செய்வேன் என்றார்.

 
 
இது பற்றி அவர் கூறியதாவது - 
 
முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நிறைய நலத்திட்டங்களை தந்து இருக்கிறார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதே எனது ஆசை.
 
இதற்காக தமிழகம் முழுவதும் கண்டிப்பாக பிரசாரம் செய்ய உள்ளேன். பிரசாரத்தில் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு அளித்து வரும் நலத்திட்டங்கள் பற்றியும், பெண்களுக்கு செய்த எண்ணற்ற திட்டங்கள் பற்றியும் பிரசாரம் செய்வேன். எனது கலைப் பயணத்தையும், அரசியல் பயணத்தையும் ஒரேநேரத்தில் திறம்பட செய்ய முடியும் என நினைக்கிறேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 


இதில் மேலும் படிக்கவும் :