திங்கள், 1 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 டிசம்பர் 2025 (16:54 IST)

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!
பாலிவுட் நடிகை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயா பச்சன், திருமணம் குறித்த தனது துணிச்சலான கருத்துகளை வெளிப்படுத்தி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
 
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், "திருமணம் என்ற நடைமுறை இப்போது காலாவதியாகிவிட்டது" என்று ஒப்புக்கொண்டார். "திருமண உறவுகள் வேகமாக மாறிவருகின்றன. இப்போதுள்ள இளம் தலைமுறையினர் மிகவும் புத்திசாலிகள்" என்றும் அவர் கூறினார்.
 
மேலும், தனது பேத்தி நவ்யாவுக்கு அறிவுரை வழங்கும்போது, "எனது பேத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பமாட்டேன். இளம் தலைமுறையினர் வாழ்க்கையை அனுபவியுங்கள்! சட்டப்பூர்வமான திருமணம் எந்த ஒரு உறவையும் வரையறுக்கவில்லை" என்று அவர் வலியுறுத்தினார்.
 
திருமணத்தின் சிக்கலான தன்மையை விளக்கும் விதமாக, அதை ஒரு லட்டுடன் ஒப்பிட்ட அவர், லட்டை சாப்பிட்டாலும் உடலுக்கு கெடுதல், சாப்பிடாவிட்டாலும் வருத்தம், அது போன்றதுதான் திருமணமும் என்று குறிப்பிட்டார்.  
 
Edited by Mahendran