1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 ஜனவரி 2026 (17:50 IST)

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தொடர் இழுபறி, தற்போது ஒரு புதிய திருப்புமுனையை எட்டியுள்ளது.
 
 திட்டமிட்டபடி ஜனவரி 9-ஆம் தேதி படம் வெளியாகாத நிலையில், தணிக்கை வாரியத்தின் முட்டுக்கட்டைகள் நீடித்தால், படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட விஜய் அதிரடி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. சுமார் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், காலதாமதம் என்பது தயாரிப்பு தரப்பிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு பரிசீலிக்கப்படுகிறது.
 
சென்னை உயர் நீதிமன்றம் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டும், சென்சார் போர்டு மேல்முறையீடு செய்திருப்பது படக்குழுவினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேளை ஓடிடி-யில் வெளியானால், தணிக்கை வாரியத்தின் பல கட்டுப்பாடுகளை தவிர்க்க முடியும் என்பது ஒரு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
 
இருப்பினும், விஜய்யின் கடைசி படம் என்பதால் இதனை திரையில் கொண்டாட காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை அளித்துள்ளது. சட்ட போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வை பொறுத்தே 'ஜனநாயகன்' திரையரங்கிற்கு வருமா அல்லது உங்கள் வீட்டு வரவேற்பறைக்கு வருமா என்பது உறுதியாகும்.
 
Edited by Siva