1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. jananayagan movie release date update

ஜனநாயகன் படத்திற்கு சென்சார் எப்பதான் கிடைக்கும்!?. எப்பதான் ரிலீஸ்?....

jananayagan
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இந்த படம் 2026 பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை.

படம் மறுதணிக்கைக்கு விண்ணப்பிக்கப்பட்டும் தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. படத்தின் இடம் பெற்றிருந்த சில காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு தணிக்கை வாரியம் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இப்படியே 6 மாதங்கள் போய்விட்ட நிலையில் விரைவில் இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் படத்திற்கு A சான்றிதழை கொடுக்கப்பட்டதாக ஒரு தணிக்கை சான்றிதழ் சமூகவலைத்தளங்களில் வெளியானது. ஆனால், அது ஒரு போலி சான்றிதழ் என்பது பின்னர்தான் தெரியவந்தது. தணிக்கை வாரியம் சொன்ன எல்லா மாற்றங்களையும் படக்குழு செய்துகொடுத்துவிட்டதால் இன்னும் 2 நாட்களில், அதாவது இந்த வார இறுதிக்குள் தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. அதன்பின் ரிலீஸ் தேதி எப்போது என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும். அனேகமாக, வருகிற 23ம் தேதி இந்த படம் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.