ஜனநாயகன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.. எப்போது ரிலீஸ்?
அரசியல் பரபரப்பு பின்னணியில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் வசனங்கள் மற்றும் காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, தணிக்கை வாரியம் படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்ததுடன், அதனை மறு ஆய்வுக் குழுவிற்கு அனுப்பி வைத்தது. இதனை எதிர்த்து படக்குழுவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையை ரத்து செய்தார். கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில், ஒரு சில காட்சிகளுக்காக ஒட்டுமொத்த படத்தையும் முடக்குவது தவறு என்று குறிப்பிட்ட நீதிபதி, படத்திற்கு உடனடியாக U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். சான்றிதழ் கிடைக்கவிருக்கும் நிலையில், படம் வரும் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தணிக்கை விவகாரத்தில் சிக்கியிருந்த இந்தப் படம் இப்போது ரிலீஸிற்கு தயாராகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva