1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. jananayagan movie achieved in online ticket booking

முன்பதிவில் சாதனை செய்த ஜனநாயகன்!.. 500 கோடி அடிக்குமா?..

jananayagan
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் நடித்த திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் மமீதா பைஜூ முக்கிய வெடத்தில் நடித்திருக்கிறார்.

பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி இந்த படம் வெளியாகவிருந்தது. ஆனால் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த தணிக்கை வாரியம் அப்போது படத்திற்கு சான்றிதழ் கொடுக்கவில்லை. பல போராட்டங்களுக்கு பின் 6 மாதங்களுக்கு பின் தற்போது இந்த படத்திற்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. வருகிற 23ம் தேதி இந்த படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

எனவே இந்தியா முழுவதும் இந்த படத்தை பார்ப்பதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்நிலையில் இந்திய அளவில் முன்பதிவில் மட்டும் ரூ.10.60 கோடி வசூல் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை 4.35 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட் விற்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 4.87 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் தி ஒடிசி ! இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா?