14 நாட்களில் ஜனநாயகன் செய்த வசூல்
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம், வெளியான 14 நாட்களில் உலகளவில் ரூ.306.31 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வசூலில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.183.35 கோடி நெட் வசூல் கிடைத்துள்ளதாகவும், வெளிநாடுகளிலும் படம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இரண்டாவது வாரத்தின் வேலை நாட்களிலும் படம் நிலையான வசூலைப் பதிவு செய்து வருவதால், வரும் வார இறுதிக்குள் உலகளாவிய வசூல் ரூ.325 கோடியை நெருங்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
