1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. issue between bharathiraja daughter and daughter in law

மனோஜின் மனைவியை விரட்டிய பாரதிராஜா மகள்!.. பெரிதாகும் சொத்து பிரச்சனை!..

bharathi raja
மறைந்த இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தன்னுடன் நடித்த நடிகை நந்தனாவை காதலித்து பாரதிராஜாவின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மகள்கள். பாரதிராஜாவுக்கு சென்னை சேத்துப்பட்டில் ஒரு வீடு உள்ளது. அது அவரின் மகள் ஜனனி பெயரில் இருக்கிறது.

அதுபோக நீலாங்கரையில் ஒரு வீடு மற்றும் காலி மனை, தியாகராய நகரில் ஒரு வீடு, வளசரவாக்கத்தில் உள்ள நாயுடு ஹால் பில்டிங், தேனாம்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் இரண்டு தளங்கள், தேனி மற்றும் வத்தலகுண்டில் வீடு மற்றும் பல ஏக்கர் நிலங்கள் இருக்கிறது. இவை எல்லாமே பாரதிராஜாவின் பெயரில் இருக்கிறது..

ஒருபக்கம், ஜனனிக்கும் நந்தனாகும் ஆகாது என்கிறார்கள். மனோஜின் மறைவுக்குப் பின் மனம் உடைந்த பாரதிராஜா மலேசியாவில் உள்ள தனது மகன் ஜனனி வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார். அப்போது நீலாங்கரை வீட்டை ஜனனி தனது பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.மேலும், தனது பெயரில் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வரும் நந்தனாவை வீட்டை விட்டு வெளியேற்றி தரும்படி காவல் நிலையத்திலும் ஜனனி புகார் அளித்துள்ளார்.

manoj

பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு நடந்த போது அங்கு அமர்ந்திருந்த நந்தனாவை எழ சொல்லிவிட்டு அந்த இடத்தில் ஜனனி அமர்ந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே அங்கு வாக்குவாதம் எழுந்தது. அப்போது ராதிகாதான் ஓடிச்சென்று அவர்கள் இருவரையும் சமாதானம் செய்தார். அப்போது நந்தனாவின் இரு மகள்களும் அங்கே அழுது கொண்டே நின்று கொண்டிருந்தார்கள். அதன்பின் உறவினர்கள் அவர்களை சமாதானப்படுத்தி சென்னைக்கு அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது

தற்போது பாரதிராஜா இல்லாத நிலையை அனேகமாக தனக்கு சேர வேண்டிய சொத்துக்கள் குறித்து நந்தனா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பதாக சொல்லப்படுகிறது
.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
சசி இல்லனா நான் இப்போ டைரக்டர் இல்ல!.. ஏ.ஆர் முருகதாஸ் ஃபீலிங்..