1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 ஜனவரி 2026 (09:19 IST)

சென்சார் சர்டிபிகேட் வருவது போல் தெரியவில்லை.. நேரடியாக ஓடிடி ரிலீஸ்? அமேசானா? நெட்பிளிக்ஸா?

jananayagan
விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. படத்தின் அனல் பறக்கும் அரசியல் வசனங்கள் மற்றும் தற்போதைய அதிகார வர்க்கத்தை சாடும் காட்சிகள் காரணமாக, சென்சார் போர்டு முட்டுக்கட்டை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தியேட்டர் ரிலீஸ் தள்ளிப்போவது தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனால், படக்குழுவினர் நேரடியாக ஓடிடி ரிலீஸ் செய்யும் முடிவை நோக்கி நகர்வதாக தகவல்கள் கசிகின்றன. குறிப்பாக, அமேசான் பிரைம் அல்லது நெட்பிளிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. சர்வதேச ஓடிடி தளங்கள் சென்சார் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட முடியும் என்பதால், படத்தின் வீரியம் குறையாமல் அப்படியே மக்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தியேட்டரில் தடை செய்யப்பட்டாலும், ஒவ்வொருவரின் மொபைல் போன் வழியாகவும் 'ஜனநாயகன்' தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கும் என்பது மட்டும் உறுதி.
 
Edited by Siva