வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 6 ஆகஸ்ட் 2025 (08:28 IST)

பிரபல நடிகையை Date செய்கிறாரா தனுஷ்?.. இந்தி ஊடகங்கள் பற்றவைத்த தீ!

பிரபல நடிகையை Date செய்கிறாரா தனுஷ்?.. இந்தி ஊடகங்கள் பற்றவைத்த தீ!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். இதன் மூலம் உலகளவில் அறியப்பட்ட நடிகராக உள்ளார். தற்போது நடிப்பில் மட்டும் இல்லாமல் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது சினிமா வாழ்க்கை மிகவும் பிரகாசமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் திருமண வாழ்க்கை 18 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது.

தனுச்ஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 18 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இந்த நட்சத்திர தம்பதியினர் சமீபத்தில் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து தனுஷ் தனிமையில் வாழ்ந்து வரும் நிலையில் அவரை சுற்றி தற்போது காதல் கிசுகிசு எழ ஆரம்பித்துள்ளது.

பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூரை அவர் ரகசியமாக தற்போது ‘டேட்’ செய்து வருவதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனுஷுக்கு தற்போது 42 வயதாகும் நிலையில் மிருனாளுக்கு 32 வயதாகிறது.