இனிகோ பிரபாகரன் தனி நாயகனாகும் வீரய்யன்

Mahalakshmi| Last Updated: திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (14:45 IST)
ரம்மி, சுந்தர பாண்டியன் படங்களில் நடித்த இனிகோ பிரபாகரன் தனி நாயகனாக நடிக்கும் படம், வீரய்யன். தஞ்சாவூர் பின்னணியில் இந்தப் படம் தயாராகிறது.
கடந்த சில வருடங்களில் தஞ்சாவூரின் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் என்னென்ன மாற்றங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதை யதார்த்தமாகச் சொல்லும் படம், வீரய்யன். இதில் இனிகோ பிரபாகரன் நாயகன். நான் இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான வேடம். இந்தப் படத்துக்காக என்னுடைய கெட்டப்பையும் மாற்றயிருக்கிறேன் என்றார்.

தஞ்சாவூரின் கிராமத்து இளைஞனாக இனிகோ நடிக்கும் இந்தப் படத்தை எஸ்.பரத் என்பவர் இயக்குகிறார். இசை எஸ்.என்.அருணகிரி. தஞ்சாவூரிலும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இந்தப் படம் என்னுடைய திரைவாழ்க்கையில் முக்கியமான திருப்பமாக இருக்கும் என்றார் இனிகோ.


இதில் மேலும் படிக்கவும் :