செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (15:30 IST)

அமெரிக்காவில் சந்தானத்தின் ஒப்பனிங் சாங்

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்கபோடு போடு ராஜா’ படத்தின் ஓப்பனிங் சாங், அமெரிக்காவில் படமாக இருக்கிறது.

 
 
சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி நடிக்கும் படம் ‘சக்கபோடு போடு ராஜா’. இந்தப் படத்தை விடிவி கணேஷ்  தயாரிக்கிறார். ஆனந்த் பால்கி இயக்கத்தில் ‘சர்வம் சுந்தரம்’ படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்ட சந்தானம், அடுத்து ‘சக்கபோடு போடு ராஜா’ படத்தின் ஓப்பனிங் பாடலுக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறார். தொடர்ந்து,  ஜார்ஜியாவிலும் அந்தப் பாடலைப் படமாக்க இருக்கிறார்கள். 
 
அடுத்து, செல்வராகவன் இயக்கும் ‘மன்னவன் வந்தானடி’ படத்துக்காக போலந்து செல்கிறார் சந்தானம். அங்கு, சில முக்கியக்  காட்சிகளைப் படமாக்க இருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களையும் முடித்தபிறகு ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் நடிக்கும் சந்தானம், அதன்பிறகு ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கிறார்.