வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2016 (16:00 IST)

பொன்ராம் இயக்கத்தில் ஆக்ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்

பொன்ராம் இயக்கத்தில் ஆக்ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்

ரெமோ படத்தை முடித்த சிவகார்த்திகேயன் அடுத்து மோகன் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.


 


அதனைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம். காக்கி சட்டையில் ஆக்ஷனை தொட்டுப்பார்த்த சிவகார்த்திகேயன், பொன்ராம் படத்தில் விட்டு விளையாடவிருக்கிறார்.
 
முதல் படத்திலேயே சட்டை பட்டன்களை கழற்றிவிட்டு, காலை அகட்டி வைத்து, அண்ணாந்து ஆக்ஷன் ஹீரோவுக்கான லுக்கை விட ஆரம்பிக்கிறார்கள் அறிமுக நடிகர்கள். மாஸ் நடிகரான சிவகார்த்திகேயன் அதற்கு ஆசைப்படுவதில் என்ன வியப்பு? காக்கி சட்டையில் ஆக்ஷன் எடுபடுமா என்று ஆழம் பார்த்தவர் பொன்ராம் படத்தில் முழு ஆக்ஷன் ஹீரோவாக ஆகப்போகிறாராம்.
 
ஜனவரியில் தொடங்கவிருக்கும் இந்தப் படத்துக்காக உடம்பை இரும்பாக்கும் முயற்சியிலும் இறங்கவிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.