வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 6 மே 2016 (12:41 IST)

ஜுலையில் அஜித்தின் புதுப்படம் - சிவா இயக்குகிறார்

ஜுலையில் அஜித்தின் புதுப்படம் - சிவா இயக்குகிறார்

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தை இயக்குகிறார், சிவா.


 
 
வீரம் படத்தின் வெற்றி காரணமாக அஜித் மீண்டும் சிவாவுக்கு தந்த வாய்ப்புதான், வேதாளம். அப்படம் வீரத்தைவிட அதிகம் வசூலித்தது. அதனால் மீண்டும் சிவாவுக்கே கால்ஷீட் தந்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது.
 
வேதாளத்தில், ஆலுமா டோலுமா என்று அஜித் ரசிகர்களை ஆட வைத்த அனிருத்தான் இந்த புதிய படத்துக்கும் இசை. வெற்றி ஒளிப்பதிவு.
 
கேங்ஸ்டர் படமாக தயாராவதாக கிசுகிசுக்கப்படும் இப்படம் ஜுலை முதல்வாரத்தில் தொடங்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவிக்கிறது.