1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Important Decision Regarding My Life Will Be Announced on 11th: Actor Clarifies on Trichy East Election Rumors

திருச்சி கிழக்கு தொகுதியின் வேட்பாளர் ராகவா லாரன்ஸ்? அவரே சொன்ன முக்கிய தகவல்...!

திருச்சி கிழக்கு தேர்தல்
திரைப்பட நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ்  திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன. இதுதொடர்பான உண்மைத் தன்மையை அறிவதற்காகப் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் பலரும் அவரைத் தொலைபேசி வாயிலாகவும், நேரிடையாகவும் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருகின்றனர்.
 
இந்த வதந்திகளும் ஊகங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் தனக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது 'பென்ஸ்'  திரைப்படத்தின் படப்பிடிப்பில் தான் தீவிரமாக பிஸியாக இருப்பதாகவும், அந்தப் படப்பிடிப்பு அட்டவணை வரும் 10-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து, தனது தாயாரின் ஆசிர்வாதத்துடன், தன் வாழ்க்கையின் மிக முக்கியமானதொரு முடிவை வரும் 11-ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். #Mattram மற்றும் #Serviceisgod ஆகிய ஹேஷ்டேகுகளுடன் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, அவர் அரசியல் களத்தில் இறங்குவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ரூ.95,000 மதிப்புள்ள காலணிகளை உதைத்தார் பிரியங்கா சோப்ரா: பிரபல ஆடை வடிவமைப்பாளர் குற்றச்சாட்டு!