அதர்வாவிற்கு அக்காவான நயன்தாரா!!

Sasikala| Last Updated: புதன், 14 டிசம்பர் 2016 (14:06 IST)
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிக்கும் படம், இமைக்கா நொடிகள். இதில் நயன்தாரா கிட்நாப் குறித்து விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார்.

 
இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா அதர்வாவின் அக்காவாக நடிக்கிறாராம். மேலும் இப்படத்தில் தனது வேடம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நயன்தாரா மேக்கப் போடாமல் இயல்பாக நடித்து வருகிறாராம். இது ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 
காக்கிச் சட்டை போடும் நயன்தாராவுக்கு ஜோடியாக ஒரு ஹீரோவை தேர்வு செய்துள்ளார் அஜய். அந்த ஹீரோ நம்ம விஜய் சேதுபதி தான். பெயருக்கு தலையை காட்டிவிட்டு போகாமல் விஜய் சேதுபதிக்கும் போதிய காட்சிகள் உள்ளதாம். நயனும், விஜய் சேதுபதியும் ஏற்கனவே நானும் ரவுடி தான் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்நிலையில் இமைக்கா நொடிகள் மூலம் மீண்டும் ஜோடி சேர்கிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :