வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 17 ஜூலை 2015 (12:14 IST)

காக்கா முட்டை மணிகண்டனின் குற்றமே தண்டனை - இளையராஜா இசையமைக்கிறார்

காக்கா முட்டை படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மணிகண்டன் விதார்த்தை வைத்து குற்றமே தண்டனை என்ற படத்தை முடித்துள்ளார். விதார்த் தயாரித்து நடித்திருக்கும் படம் இது.
 

 
க்ரைம் த்ரில்லரான இந்தப் படத்துக்கு குற்றமும் தண்டனையும் என்று மணிகண்டன் பெயர் வைத்திருந்தார். இதைவிட குற்றமே தண்டனை என்று இருந்தால் நன்றாக இருக்கும் என இளையராஜா கூறியதால் அப்படியே படத்தின் பெயரை மாற்றியுள்ளார். 
 
ஒரு கொலை எப்படி பல நபர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதுதான் குற்றமே தண்டனை படத்தின் கதை. இதில் பாடல்கள் கிடையாது. சமீபத்தில் வெளியான பல தமிழ்ப் படங்களின் கதையோட்டத்தை பாடல்கள் சிதைத்தன. இந்தப் படத்துக்கு பாடல்கள் தேவைப்படாததால் பாடல்கள் வைக்கவில்லை என்றார்.
 
குற்றமே தண்டனைக்கு பின்னணி இசை அமைக்கிறார் இளையராஜா.