1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Bala
Last Modified: திங்கள், 28 மார்ச் 2016 (13:51 IST)

பின்னணியிசைக்கான தேசிய விருது பெறும் இளையராஜா

63 -வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது கிடைத்துள்ளது.


 

இளையராஜா இதற்குமுன் சலங்கை ஒலி, சிந்துபைரவி, ருத்ர வீணை படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார். மலையாளப் படமான பழசிராஜாவுக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது. இப்போது இரண்டாவது முறையாக தாரை தப்பட்டை படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் யாரும் இதுவரை ஆயிரம் திரைப்படங்களுக்கு இசையமைத்ததில்லை. இளையராஜா அந்த சாதனையை தாரை தப்பட்டையில் பூர்த்தி செய்தார். அந்தப் படத்துக்காக ஐந்தாவது முறையாக இளையராஜா தேசிய விருது பெறுவது சிறப்பு.