தொடர்புடைய செய்திகள்
- இளையராஜாவை மனசுல நினைச்சி எழுதின கதை மஞ்சணத்தி!. மாரி செல்வராஜ் பேட்டி..
- எனக்கு வேலை இருக்கு.. உள்ள போய்டுவேன்!.. ரசிகர்களிடம் கோபப்பட்ட இளையராஜா!..
- இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்!.. வைரல் போட்டோ!..
- இளையராஜா பக்கம் போகும் இளம் இயக்குனர்கள்!.. கம்பேக் இசைஞானி!...
- மாரி செல்வராஜ் - இளையராஜா இணையும் மஞ்சணத்தி- வெளியானது பர்ட்ஸ் லுக் போஸ்டர்
உன் வேகத்தை எவராலும் தொட முடியாது பாலு: எஸ்பிபி பிறந்தநாளில் இளையராஜா உருக்கம்!
இந்தியத் திரையுலகின் இசைச் சகாப்தம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் இடத்தை வேறு எவராலும் நிரப்ப முடியாது என்பதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது இசைஞானி இளையராஜாவின் வாழ்த்துச் செய்தி.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் படத்தில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய எஸ்பிபி, இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத் படம் வரை சுமார் ஐந்து தலைமுறை நடிகர்களுக்குக் குரல் கொடுத்துள்ளார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி முதல் இன்றைய சென்சேஷன் அனிருத் வரை, அவர் பணியாற்றாத இசையமைப்பாளர்களே இந்தியத் திரையுலகில் இல்லை எனலாம். துரதிர்ஷ்டவசமாக, கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பால் அவர் மறைந்தது திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக அமைந்தது.
இளையராஜா மற்றும் எஸ்பிபி கூட்டணி என்பது தமிழ் சினிமாவின் பொற்காலம் மட்டுமல்ல, அது ஒரு பாடாத காவியம். இவர்களது நட்பு திரையையும் தாண்டியது. இளையராஜாவின் இசையில் மட்டுமே எஸ்பிபி சுமார் 2500 பாடல்கள் வரை பாடி சாதனை படைத்துள்ளார்.
இன்று எஸ்பிபியின் பிறந்தநாளை முன்னிட்டு இளையராஜா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒரு இசையமைப்பாளரின் கற்பனையை அவரை விட வேகமாக யாராலும் புரிந்துகொள்ள முடியாது; ஒரு பாடலுக்காக எஸ்பிபி-யை விட யாரும் அதிக கவனத்தைச் செலுத்தியதும் கிடையாது. அவரது வாழ்க்கை, நட்பு மற்றும் 50,000 பாடல்கள் என்ற நிகரற்ற சாதனையை நாம் கொண்டாடுவோம். பிறந்தநாள் வாழ்த்துகள், எஸ்பிபி! என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பாடலைப் பாடும்போது, இளையராஜா என்ன நினைக்கிறார் என்பதை அவர் சொல்லி முடிப்பதற்குள்ளேயே எஸ்பிபி சரியாகப் பிடித்து விடுவார். எஸ்பிபியின் அந்த அபாரமான திறனையே இன்று இளையராஜா தனது பதிவிலும் உறுதிப்படுத்தியுள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவான பாடல்கள் இன்றும் ரசிகர்களின் இதயத் துடிப்பாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
