இளையராஜா அழைத்தார்... கமல் பாடினார்

இளையராஜா அழைத்தார்... கமல் பாடினார்


Sasikala| Last Updated: சனி, 6 பிப்ரவரி 2016 (12:58 IST)
இளையராஜா இசையமைக்கும் முத்துராமலிங்கம் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் கமல். இந்த காம்பினேஷன் எப்படி நடந்தது?

 
 
கௌதம் கார்த்திக் நடிக்கும் முத்துராமலிங்கத்தை ராஜதுரை என்பவர் இயக்குகிறார். படத்தில் ஒரு அறிமுகப் பாடல் வருகிறது. எஸ்.பி.பி.யை பாட வைக்கலாம் என்று ராஜதுரை சொன்னபோது, இளையராஜாதான், கமல் பாடினால் நன்றாக இருக்கும் என்று சொல்லி, அவரே கமலுக்கு போனை போட்டிருக்கிறார்.
 
இளையராஜா கேட்டு கமல் மறுப்பதா? உடனே வந்து பாடி தந்திருக்கிறார்.
 
நடிப்பது கௌதம் கார்த்திக், படத்தின் பெயர் முத்துராமலிங்கம், பாடல் வரியோ, தெற்குதேச சிங்கமடா... இது போதாதா? இன்னொரு தேவர் சாதி துதிப்பாடலா என்று இப்போதே சமூக ஆர்வலர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
தேவர் சாதி விஷயத்தில் மட்டும் கமல் விரும்பி மாட்டிக் கொள்வது ஏனோ?


இதில் மேலும் படிக்கவும் :