1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. ilavarsu talk about jeeva

புது டிரெண்டை உருவாக்கிய ஜீவா! இனிமே பாருங்க.. இளவரசு சொன்ன புது தகவல்

ஜீவா
இப்போது டாக் ஆஃப் தி டவுன்னாக இருப்பவர் நடிகர் சிவா மனசுல சக்தி படத்தில் ஒரு காமெடியான கேரக்டரில் நடித்திருப்பார். அப்படியே திரும்பி பார்த்தால் ராம், கற்றது தமிழ் என சவாலான கேரக்டரிலும் நடித்திருப்பார். எந்த கேரக்டருக்கும் பொருந்தக் கூடிய நடிகர்தான் ஜீவா. காமெடியும் வரும். சென்டிமெண்ட்டும் வரும்.
 
ஆனால் சமீபகாலமாக அவருக்குண்டான கதைக்களம் சரியாக அமையாததால் படங்களே வரவில்லை. சமீபத்தில்தான் பொங்கலுக்கு அவருடைய தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் வெளியானது. ஜன நாயகன் ஒரு பக்கம் ரிலீஸாகவில்லை. பராசக்தி படத்தை பார்த்தவர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்தனர். அதனை தொடர்ந்து வா வாத்தியாரே படமும் வர அது ரசிகர்களுக்கு திருப்தியளிக்கவில்லை.
 
அதனால் விரக்தியில் இருந்த மக்கள் சரி இந்த படத்தையாவது போய் பார்ப்போம் என்று நினைத்துதான் தலைவர் தம்பி தலைமையில் படத்தை பார்க்க வந்தனர். ஆனால் பார்த்தவர்களுக்கு ஒரே குஷி. நீண்ட வருடங்களுக்கு பிறகு ஃபேமிலியோடு சந்தோஷமாக இந்தப் படத்தை பார்த்தோம் என கொண்டாட ஆரம்பித்தனர். அவ்வளவுதான் படம் ஹிட். அனைத்து  திரையரங்குகளிலும் இந்தப் படம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த இளவரசு தன்னுடைய அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
 
அதாவது படம் பார்த்தவர்கள் சில விமர்சனங்களை முன் வைத்தனர். அதுதான் என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. லைட்டிங் எல்லாம் பார்க்கும் போது மலையாள சினிமா மாதிரி இருந்தது என சொன்னார்கள். லைட்டிங்கில் ஏதுடா மலையாள சினிமா தமிழ் சினிமான்னு பிரிக்கிறீங்கனு சிரித்தப்படியே தனது பேச்சை தொடங்கினார். ஜீவாவை பொறுத்தவரைக்கும் அவர் ஒரு ரெகுலர் ஹீரோ கிடையாது. எந்த கேரக்டரானாலும் உள்வாங்கிவிடுவார். ஹீரோனா ஆக்‌ஷன், மாஸ் இப்படித்தான் இருக்கணும்னு இல்லை.
 
கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் மாதிரியே இருப்பார். உதாரணமாக மலையாளத்தில் மோகன்லால், பகத்பாசில் போன்றோர்கள் அப்படித்தான். கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவே மாறிடுவார்கள். அப்படித்தான் இந்தப் படத்திலும் ஜீவா இருந்தார். இது இனிவரும் அடுத்த ஹீரோக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும். சொல்லப்போனால் ஒரு புது டிரெண்ட்டை உருவாக்கியிருக்கிறார் ஜீவா. டூயட் கிடையாது. பாடல் கிடையாது. கேரக்டருக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என இளவரசு கூறியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
நடுவானில் சந்தித்த திரை நட்சத்திரமும் கிரிக்கெட் நட்சத்திரமும்.. வைரல் புகைப்படம்..!