ஓடிடிக்கு வரும் இதயம் முரளி ..
அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் நடித்து வெளிவந்த படம் இதயம் முரளி. டான் பிச்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கியுள்ள இப்படம் காதல் ,நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான திரைப்படமாக உருவாகியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற இதயம் முரளி திரைப்படம், வரும் ஆகஸ்ட் 7 முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இந்த அறிவிப்பால் படத்தை திரையரங்குகளில் தவறவிட்ட ரசிகர்களும், மீண்டும் பார்க்க விரும்புவோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 7 முதல் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
