நான் ஆண்களுடன் அப்படித்தான்! - ரைசா ஓபன் டாக்!

Last Modified வியாழன், 6 டிசம்பர் 2018 (13:16 IST)
பிக் பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான்.


 
மாடலிங் துறையின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாகி கதாநாயகி லெவலுக்கு உயர்ந்து விட்டார்.
 
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில் ரைசா மற்றும் ஹரீஷ் கல்யாண் இருவரும்  நடிகை ஸ்ருதி ஹாசன் தொகுப்பாளியாக பங்குபெற்று வரும் ”ஹலோ சகோ' நிகழ்ச்சியில் கடந்த வாரம் கலந்து கொண்டனர்.  அப்போது ஸ்ருதி ஹாசன் ரைசாவிடம் சில எடக்கு முடுக்கான கேள்விகளை கேட்டார்.
 
" நீங்கள் டீ டோட்டலரா என ஸ்ருதி ஹாசன் கேட்டதற்கு இல்லை என்று கூலாக பதிலளித்தார்".மேலும், நீங்கள் ஆண்களுடன் ( flirt ) அதாவது உல்லாசமாக இருந்துள்ளீர்களா?  என்று கேட்டதற்கு, 
 
ஓஹ் எஸ்!  நிறைய ஆண்களுடன் flirt செய்துள்ளேன் என்று சர்வ சாதாரணமாக கூறினார் ரைசா .
 
மேலும் தான் ஒரு மாடல் என்பதால் வெளியூர் செல்லும் போது பல ஆண்களுடன் நெருக்கமாக இருந்ததாக அவர்  தெரிவித்துள்ளார்.
 
ரைசா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே புகைப்பிடிப்பவர் என்பது நம் அனைவரும் தெரிந்தது தான், அதே போல் அவருடைய கடந்த கால காதலும் அதன்  தோல்வியும் அனைவருக்கும் தெரியும். 


 
ஆனால் தற்போது flirt அதாவது ஆண்களுடன் கொஞ்சி பேசுவேன் என்று  சாதாரணமாக கூறியுள்ளது கேட்பவர்களுக்கே சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 


இதில் மேலும் படிக்கவும் :