அடிப்படையில நான் தம் அடிக்காதவன்

Mahalakshmi| Last Updated: சனி, 18 ஜூலை 2015 (12:12 IST)
மாரி படம் ஹிட்டாகியிருக்கிறது. முதல் நாள் திரையிட்ட இடமெல்லாம் கூட்டம் அலை மோதியது. ரசிகர்களின் பல்ஸ் அறிந்து பன்ச் டயலாக் வைத்ததால் கதை, திரைக்கதை அவ்வப்போது படுத்துக் கொண்ட போதிலும் படம் தப்பித்திருக்கிறது.
ஒரே குறை, படம் நெடுக தனுஷ் சிகரெட்டாக ஊதித்தள்ளுவது.
 
இதுபற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டதற்கு, "அநேகன் படத்தில் நான் ஒரு காட்சியில்கூட தம்மடிக்கலை. மாரியில் தாதா கேரக்டர். அந்த இயல்புக்கு தம்மடிக்கிற மாதிரி நடித்தால் நன்றாக இருக்கும். கதாபாத்திரம் எதை கேட்குதோ அதை செய்றேன். அடிப்படையில் நான் தம்மடிக்கிறதோ தண்ணியடிக்கிறதோ கிடையாது" என்றார் தனுஷ்.
 
தனுஷுக்கு இருக்கிற விவரம் அவரது இளம் ரசிகர்களுக்கு இல்லை. தலைவர் ஸ்டைலா சிகரெட் பிடிக்கிறார் என்று அவர்களும் பிடித்துத் தொலைக்கிறார்கள்.
 
ஏம்பா, சிகரெட் பிடிக்காத தாதா உலகத்துலயே இல்லையா.


இதில் மேலும் படிக்கவும் :