ரோபோ சங்கர் உடலில் என்ன பிர்ச்சனை… மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை!
பல்வேறு மேடைகளில் மிமிக்ரி செய்து 2000 களின் தொடக்கத்தில் பிரபலமானவர் சங்கர். மேடைகளில் அவர் ரோபோக்கள் போல நடனமாடியதால் ரோபோ சங்கர் என்ற பெயர் அவருக்கு உருவானது. அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார்.
அங்கே அவர் தொடர்ந்து சிறப்பானப் பங்களிப்பை அளித்த அவர் தீபாவளி படம் மூலமாக பெரியதிரையில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் , 'மாரி', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்', 'சிங்கம் 3', 'விஸ்வாசம்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பெற்று தேறி வந்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்ட நிலையில் நேற்றிரவு அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானார். இது சம்மந்தமாக அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் “பெருங்குடியில் உள்ள எங்கள் மருத்துவமனையில் ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்ட போது அவருக்குக் குடலில் இரத்தக் கசிவு இருந்தது. மேலும் அவர் உடலில் சில உறுப்புகள் செயலிழந்து இருந்தன. அவருக்கு உயிர் காக்கும் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்றிரவு 9.05 மணிக்கு அவர் சிகிச்சைப் பலனின்றி இயற்கை எய்தினார்” எனக் கூறியுள்ளது.