பிக்பாஸ் ஒரு ஆபாச நிகழ்ச்சி; தடை கோரி இந்து மக்கள் கட்சி போலீஸில் புகார்


Abimukatheesh| Last Updated: புதன், 12 ஜூலை 2017 (14:42 IST)
இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் நோக்கில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் என்னும் ஆபாச நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி அமைப்பின் தலைவர் சிவா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

 

 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி அமைப்பின் தலைவர் சிவா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். அவர் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-
 
இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் நோக்கில் தொடர்ந்து சினிமா, டிவி நிகழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் உச்சகட்டமாக பிக்பாஸ் எனும் ஆபாச நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் எவ்வித தொடர்பும் இல்லாத எழு ஆண்களும், எழு பெண்களும் கலந்துக்கொண்டு ஆபாசமாக பேசியும், 75% நிர்வாணமாகவும் நடித்து வருகிறார்கள். 
 
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொலைக்காட்சியை பார்த்து வரும் சூழலில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் சமூக சீர்கேடுகளை அதிகரிக்க செய்யும். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் உள்பட கலந்துக்கொண்ட 14 பேரையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியக பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்.
 
இவ்வாறு புகார் மனுவில் சிவா குறிப்பிட்டுள்ளார்.    


இதில் மேலும் படிக்கவும் :