1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Heart Beat 3 Missing Characters: Shocking Updates for Fans Ahead of Disney+ Hotstar Premiere

ஹார்ட்பீட் 3 சீசனில் 4 கேரக்டர்கள் இல்லையா? இனி அடுத்தடுத்த சீசனிலும் இருக்க வாய்ப்பில்லையா?

ஹார்ட் பீட் 3
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'ஹார்ட் பீட்' தொடரின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தொடர்ந்து, தற்போது இதன் மூன்றாவது பாகம் நாளை அதாவது ஜூலை 30 அன்று வெளியாக உள்ளது. ஆனால், இந்த புதிய சீசனில் சில முக்கியக் கதாபாத்திரங்கள் இடம்பெறவில்லை என்ற தகவல் அதன் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
குறிப்பாக, முதல் இரண்டு சீசன்களில் 'தேஜு' என்ற கதாபாத்திரத்தில் நடித்த யோகலட்சுமி இந்த மூன்றாவது சீசனில் நடிக்கவில்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளார். அதேபோன்று, அனிதா மற்றும் 'நவீன்' கதாபாத்திரங்களில் நடித்த முறையே பாட்டனி குமார் மற்றும் ஆர்.ஜே. ராம் ஆகியோரும் இந்த புதிய சீசனில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.  அதேபோல் குணா கேரக்டரில் நடித்த சர்வாவும் இந்த சீசனில் இல்லை.. 
 
இந்த தொடருடன் பயணம் செய்த நினைவுகளைப் போற்றுவதாக பாட்டனி குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். வழக்கமான முகங்கள் இல்லாமல் வரவிருக்கும் இந்த 'ஹார்ட் பீட் 3' தொடரை ரசிகர்கள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொண்டு ஆதரவளிப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
விஜய்யின் பிகில் பட நடிகை தாயானார்.. ரசிகர்கள் வாழ்த்து..