என்னை கண்ட இடத்தில் தொட்டு கிள்ளினான்: தனுஷ் தோழியின் பகீர் பேட்டி!

Sasikala| Last Modified ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (15:56 IST)
தனுஷ் நடித்த ராஞ்ஹனா படத்தில் அவரின் தோழியாக நடித்தவர் ஸ்வரா பாஸ்கர். அவர் பிரேம் ரத்தன் தன் பாயோ படத்தில் சல்மான் கானின் தங்கையாக நடித்திருந்தார்.

 
இந்நிலையில் அவர் ’பிரேம் ரத்தன் தன் பாயோ’ விளம்பர நிகழ்ச்சிக்காக சென்றபோது தனக்கு நடந்தது பற்றி கூறுகையில், பட விளம்பர  நிகழ்ச்சிக்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கோட் விமான நிலையத்தில் நான், சல்மான் கானுடன் சென்றபோது அங்கு கூட்டம் கூடிவிட்டது. அப்போது கூட்டத்தில் சிலர் என்னை கண்ட இடத்தில் தொட்டார்கள். அனுபம் கேர் சார் தான் என்னை காப்பாற்றி  காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
 
டெல்லியில் கூட்டம் நிறந்த புக் பஜாரில் ஒருவன் என்னை கிள்ளினான். உடனே நான் அந்த நபரை பிடித்து ஓங்கி கன்னத்தில் அடித்துவிட்டேன். இதை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை.
 
நான் மும்பைக்கு வந்த புதிதில் ரயிலில் மதிய வேளையில் முதல் வகுப்பு பெட்டியில் ஏறிய போதைப் பொருள் அடிமையான ஒருவன் கூட்டம் இல்லாததை பயன்படுத்தி சுய இன்பம் அனுபவித்தான். அதை பார்த்து பயந்துபோய் அவரை  திட்டி நான் வைத்திருந்த குடையால் அடித்து, போலீசில் பிடித்துக் கொடுக்க அவரின் சட்டை காலரை பிடித்து இழுத்தேன். இதை உணர்ந்த அவர் ரயில் நின்றபோது என் கையை தள்ளிவிட்டு ஓடிவிட்டான் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :