படம் லீக் ஆனப்போ விஜய் சார் சொன்னது இதுதான்!.. ஹெச்.வினோத் நெகிழ்ச்சி..
சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். அதன்பின் தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை. வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.
அதன் பின் நடிகர் விஜய் அரசியலுக்கு செல்வதற்கு முன் கடைசியாக நடித்த ஜனநாயகன் படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். ஆனால் அந்த திரைப்படம் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் அப்போது வெளியாகவில்லை. தற்போது பிரச்சனை எல்லாம் முடிந்து வருகிற 23ம் தேதி அந்த படம் வெளியாகவிருந்தது.
இந்நிலையில் ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டி கொடுத்த ஹெச்.வினோத் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிட முடியாத நிலை வந்தது.. பின்னர் படமும் இணையத்தில் லீக் ஆனது. இதனால் விஜய் சார் மனதளவில் வருத்தப்பட்டார்.. ஆனாலும் அவர் எனக்கு போன் செய்து கவலைப்படாதீங்க.. சினிமாவில் இந்த மாதிரி நடக்கும்.. எல்லாம் சரியாயிடும்.. பாத்துக்கலாம் என்று எனக்கு ஆறுதல் சொன்னார் எனக் கூறியிருக்கிறார்..