1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. h vinoth says jananayagan not just a commercial movie

ஜனநாயகன் மாஸா இருக்கும்!.. வந்து பாருங்க!.. ஹெச்.வினோத் பேட்டி!...

jananayagan
ஒருவழியாக விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வருகிற 23ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. எனவே ஆறு மாதமாக இந்த படத்தை பார்க்க காத்திருந்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். உலகமெங்கும் இந்த படத்திற்கான முன்பதிவு தற்போது துவங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்த ஜனநாயகன் படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் இந்த படம் பற்றிய பல தகவல்களை பகிர்ந்துள்ளார். நிறைய பேர் ஜனநாயகன் படத்தை பார்த்து விட்டார்கள். அவர்கள் தியேட்டருக்கு வருவார்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அவர்கள் விஜய் சாரை பார்க்க தியேட்டருக்கு வர வேண்டும்.

படத்தின் மீது வெறுப்பு காட்டாமல் திரையரங்குகளில் வந்து ஆதரவு கொடுங்கள். மேலும் கடைசி 30 நிமிடங்கள் மிகவும் முக்கியமான மற்றும் சீரியஸான கருத்துக்களை கொண்ட படமாக இருக்கும்.. ஜனநாயகன் திரைப்படம் 200 சதவீதம் விஜய் சாருக்கான மாஸ் படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம் இது வெறும் கமர்சியல் படமாக மட்டுமல்லாமல் சமூகத்திற்கு தேவையான சென்சிட்டிவான அரசியல் கருத்துக்களையும் ஒற்றுமை அரசியலையும் பேசும் திரைப்படமாக இருக்கும்.. படம் ரிலீசான போதிலும் A சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி தற்போது படம் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. சென்சாரில் நீக்கப்பட்ட சில புதிய காட்சிகள் மற்றும் வசனங்கள் தற்போது படத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது’ எனவும் அவர் கூறியிருக்கிறார்
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
படம் லீக் ஆனப்போ விஜய் சார் சொன்னது இதுதான்!.. ஹெச்.வினோத் நெகிழ்ச்சி..