1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. h vinoth asked to release the jananayagan soon

படத்தை உடனே ரிலீஸ் பண்ணுங்க!.. ஹெச்.வினோத் பண்ண சம்பவம்!..

jananayagan
விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாகவிருந்த நிலையில் படத்திற்கு தனக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. ஒரு வழியாக பல மாதங்களுக்கு பின் தற்போது படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டது. வருகிற 24-ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என பரவலாக சொல்லப்பட்டது.

ஆனால், ஒரு நாள் முன்பே அதாவது ஜூலை 23ம் தேதி படம் ரிலீஸ் என தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. எனவே இந்த செய்தி விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது. கண்டிப்பாக ஜனநாயகன் திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு தியேட்டரில் ஒரு திருவிழாவாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

சான்றிதழ் கிடைத்துவிட்ட நிலையில் வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யலாம், விஜய்யின் கடைசி படம் என்பதால் பெரிய அளவில் புரமோஷன் செய்து படத்தைக் கொண்டு போய் சேர்க்கலாம் என தயாரிப்பாளர் நினைத்துள்ளார். ஆனால் இயக்குனர் ஹெ.வினோத் ‘மீண்டும் வேறு ஏதாவது பிரச்சனை வருவதற்குள் படத்தை உடனே ரிலீஸ் செய்யுங்கள்’ என தயாரிப்பாளரிடம் அழுத்தம் கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரின் புலம்புலை தாங்க முடியாமல்தான் வருகிற 23ம் தேதியே படம் ரிலீஸ் என தற்போது தயாரிப்பாளர் அறிவித்திருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது    .
அடுத்த கட்டுரையில்
ஜனநாயகன் ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்!. விஜய் ஃபேன்ஸ் ஹேப்பி!..