1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. h vinoth answer about jananayagan leaked by him

ஜனநாயகனை லீக் பண்னதே நீங்களா?!.. அரசியல்தான் காரணமா?!. ஹெச்.வினோத் பதில் இதுதான்!..

vinoth
விஜயின் ஜனநாயகன் திரைப்படம் சென்சாரில் சிக்கி வெளிவராமல் இருந்த போது தேர்தலுக்கு முன்பு முழு படமும் இணையத்தில் லீக் ஆனது. எனவே பலரும் அதை டவுன்லோட் செய்து பார்த்தனர். அது தொடர்பாக எடிட்டிங் துறையில் பணிபுரிந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் ஜனநாயகன் படத்தில் நிறைய அரசியல் காட்சிகள் இருப்பதால் விஜயின் டீம்தான் தேர்தலுக்கு முன்பு இந்த படத்தை வெளியிட்டிருக்கிறது என அப்போது செய்திகள் பரவியது..

தற்போது வருகிற 23ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே ஜனநாயகன் பட இயக்குனர் ஹெச்.வினோத்தை பேட்டி எடுத்தார். அப்போது ‘ஜனநாயகன் படத்தை லீக் செய்ததே உங்கள் டீம்தான்.. அரசியல்ரீதியாக விஜய்க்கு அனுதாபம் கிடைக்கவே இது செய்யப்பட்டதாக அப்போது ஒரு பேச்சு எழுந்தது..  இதை ஒத்துக் கொள்கிறீர்களா?’ என ரங்கராஜ் பாண்டே கேட்டார்..

அதற்கு பதிலளித்த ஹெச்.வினோத் ‘எஸ்.பி மற்றும் டி.எஸ்.பிக்கள் இது தொடர்பாக விசாரணை செய்தார்கள்.. நாங்கள் அப்படி செய்திருந்தால் அவர்கள் அதை சுலபமாக கண்டுபிடித்திருப்பார்கள். எங்கே இருந்து படம் கசிந்தது என அவர்கள் google ஆபீஸிடம்  பேசினார்கள். அப்போதுதான் ஒரு அசிஸ்டன்ட் எடிட்டர் இதை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது..

இப்போதுவரை அதன் பின்னணி என்ன என்று எங்களுக்கு தெரியாது.. அந்த அசிஸ்டன்ட் எடிட்டர் ஏன் அதை செய்தார் என்பது எங்களுக்கு தெரியவில்லை.. போலீசாரும் அவர்களின் ஸ்டைலில் விசாரணை நடத்தினார்கள்.. ஆனாலும் எங்களுக்கு இப்போது வரை பதில் கிடைக்கவில்லை’ என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
The Odyssey: 4 நாட்களில் வசூல் சாதனை படைத்த கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி