கோல்மால் 4 தள்ளி வைப்பு... ரோஹித் ஷெட்டிக்கு 2.0 படக்குழு நன்றி

Sasikala| Last Modified சனி, 10 டிசம்பர் 2016 (13:19 IST)
2017 தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட கோல்மால் 4 இந்திப் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்காக அப்படத்தின் இயக்குனர் ரோஹித் ஷெட்டிக்கு 2.0 படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

 
2.0 படத்தின் பர்ஸ்ட் லுக்கின் போது, 2017 தீபாவளிக்கு 2.0 வெளியாகும் என்று அறிவித்தனர். அதே தீபாவளிக்குதான் ரோஹித் ஷெட்டியின் கோல்மால் 4 வெளியாவதாக அறிவித்திருந்தனர். 2.0 வெளியாவதால் கோல்மால் 4 படத்தின் வெளியீட்டை ரோஹித் ஷெட்டி தள்ளி வைத்துள்ளார். அதற்கு 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் தலைமை படமூடைப்பாக்கக்குழு தலைவர் ராஜு மகாலிங்கம் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
 
ரோஹித்ஜி, 2.0 படத்துக்கான உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. நீங்கள் ரஜினியின் தீவிரமான ரசிகர்களில் ஒருவர் என அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :