கௌதம் கார்த்திக் நடிக்கும் இவன் தந்திரன்

கௌதம் கார்த்திக் நடிக்கும் இவன் தந்திரன்

Sasikala| Last Modified செவ்வாய், 4 அக்டோபர் 2016 (14:46 IST)
ஜெயம் கொண்டான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, முதலான படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் தனது புதிய படத்துக்கு, இவன் தந்திரன் என பெயர் வைத்துள்ளார். இதில் கௌதம் கார்த்திக், கதாநாயகனக நடிக்க இரண்டாவது கதாநாயகனாக முன்னா நடிக்கிறார்.

 
 
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் தோல்விக்குப் பிறகு கண்ணன் இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக், ஷரதா ஸ்ரீநாத் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் சூர்யா வெளியிட்டார். படத்துக்கு, இவன் தந்திரன் என பெயர் வைத்துள்ளனர்.
 
இந்தப் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் சென்னையில் நடத்த உள்ளனர்.  ‘அபிரா பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் சார்பாக ஆஷாஸ்ரீ தயாரிக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் வி.என்.மோகன் செய்கிறார். கே.பிரசன்னா இசை அமைக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :