1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Gatta kusthi 2 movie 5th day collection

கட்டா குஸ்தி 2 : 5ம் நாள் வசூல் நிலவரம்

கட்டா குஸ்தி 2
திரையரங்குகளில் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக உருவெடுத்துள்ள  கட்டா குஸ்தி 2  திரைப்படத்தின் கடந்த 5 நாட்களுக்கான அதிகாரப்பூர்வ வசூல் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த 2022-ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி கூட்டணியில் வெளியாகி, ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவானது. நகைச்சுவையை மையமாகக் கொண்ட ஒரு பக்கா ஸ்போர்ட்ஸ் காமெடி டிராமா  ஜானரில் உருவான கட்டா குஸ்தி 2  திரைப்படம், கடந்த ஜூலை 3-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது.நட்சத்திர பட்டாளமும் கதாபாத்திரங்களும்முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகத்திலும் முன்னணி கதாபாத்திரங்களாக விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களது எதார்த்தமான நடிப்பும், கணவன்-மனைவிக்கு இடையேயான காமெடி கெமிஸ்ட்ரியும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
 
இவர்களுடன் இணைந்து, கதையின் முக்கிய நகர்வாக இவர்களது மகளாக பேபி சாரா  ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கருணாஸ், கஜராஜ், கருணாகரன், முனிஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
முதல் பாகத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் செல்லா அய்யாவு, இந்த இரண்டாம் பாகத்தையும் முழுக்க முழுக்க ஃபேமிலி ஆடியன்ஸை  கவரும் வகையில் சென்டிமென்ட், காமெடி மற்றும் எமோஷன் கலந்த பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக இயக்கியுள்ளார். இப்படத்திற்கு  ஷான் ரோல்டன் துள்ளலான பாடல்களையும், விறுவிறுப்பான பின்னணி இசையையும் அமைத்துள்ளார். 
 
மக்களின் வரவேற்பும் 5 நாள் வசூல் சாதனையும்திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் இருந்தே பொது மக்கள், குடும்பங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. குறிப்பாக, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகளில் குடும்பங்களின் கூட்டம் அலைமோதியது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் கடந்த 5 நாட்களில் மட்டும் உலக அளவில் சுமார் ரூ.25.64 கோடி வசூல்  செய்து சாதனை படைத்துள்ளது.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
விரைவில் பார்ட் 3!.. காந்தாரா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!.. ரிஷப் ஷெட்டி கொடுத்த அப்டேட்!...