தொடர்புடைய செய்திகள்
- கட்டா குஸ்தி 2 - பாசிடிவ் விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை மாறன்
- பாசிட்டிவ் விமர்சனங்களை பெறும் கட்டா கஸ்தி 2!.. விஷ்ணு விஷாலுக்கு ஒரு ஹிட்!..
- பாக்யராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய வைரமுத்து!.. வெளியான போட்டோ!..
- 16 வயதினிலே ஷூட்டிங்கில் ரஜினி முகத்தில் துப்பிய பாரதிராஜா: வைரமுத்து பகிர்ந்த அந்த சம்பவம்
- டார்க்: 2ம் நாள் வசூல் நிலவரம்
பாக்ஸ் ஆபீஸில் மிரட்டும் 'கட்டா குஸ்தி 2'.. மூன்றே நாட்களில் 18 கோடி வசூல்
செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் வெளியாகி இருக்கும் கட்டா குஸ்தி 2 திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது. வெளியான 3 நாட்களில் மட்டும் இப்படம் ரூ. 18.78 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2022-ஆம் ஆண்டு செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'கட்டா குஸ்தி'. கேரளாவில் மிகவும் பிரபலமான பாரம்பரிய கட்டா குஸ்தி மல்யுத்த போட்டியை அடிப்படையாக வைத்து, கணவன் - மனைவிக்கு இடையேயான ஈகோ மற்றும் நகைச்சுவையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. கமர்ஷியல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 4 ஆண்டுகள் கழித்து இக்கூட்டணியின் இரண்டாம் பாகமாக கட்டா குஸ்தி 2 உருவானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படம், முதல் காட்சியிலிருந்தே ரசிகர்களிடம் மிகச்சிறந்த பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. நேர்மறையான விமர்சனங்கள் காரணமாக, குடும்ப ஆடியன்ஸ் வருகை அதிகரித்து ஒவ்வொரு நாளும் வசூல் கணிசமாக உயர்ந்து வருகிறது.
திரையரங்கு வட்டாரங்களின்படி, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படத்தின் வசூல் அசுர வேகத்தில் ஏறியுள்ளது. சனிக்கிழமை மட்டும் இப்படம் ரூ. 4.95 கோடி வசூல் செய்திருந்தது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மேலும் அதிகரித்து ரூ. 6.25 கோடி வசூலித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, வெளியான முதல் 3 நாட்களில் மட்டும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் இந்திய அளவில் ரூ. 18.78 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
முதல் பாகத்தைப் போலவே இதிலும் விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி காம்போ மற்றும் செல்ல அய்யாவுவின் காமெடி திரைக்கதை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. நடப்பு வார நாட்களிலும் படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், இந்தத் திரைப்படம் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் மிக முக்கிய வசூல் சாதனைப் படமாக அமையும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
அடுத்த கட்டுரையில்
