1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. gatta kushit 2 movie box office report

கட்டா குஸ்தி 2 ஹிட்டா? இல்லையா?.. முதல் நாள் வசூல் என்ன?...

gatta kusthi2
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து 4 வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கியிருந்தார். தனது மனைவி ஒரு கட்டா குஸ்தி வீராங்கனை என்பது தெரியாமல் அவரை விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொள்ள அதன்பின் என்ன நடக்கிறது? மனைவியின் லட்சியத்திற்கு விஷ்ணு விஷால் துணையாக இருந்தாரா? என்பதுதான் படத்தின் கதை.

இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததால் படம் நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில்தான், தற்போது கட்டா குஸ்தி  படத்தின் இரண்டாம் பாகம் கட்டா குஸ்தி 2 என்கிற தலைப்பில் நேற்று தமிழகமெங்கும் வெளியானது. முதல் காட்சியிலிருந்தே இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வர துவங்கியது. இந்நிலையில் நேற்று முதல் நாளில் இந்த திரைப்படம் 2.55 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

குறிப்பாக பெண்களை கவரும் படி கட்டா குஸ்தி திரைப்படம் அமைந்திருக்கிறது. கணவன் மனைவி மற்றும் தந்தை மகள் இடையான சென்டிமென்ட் மற்றும் காமெடி காட்சிகள் படத்திற்கு பலமாக இருப்பதாக விமர்சனங்கள் சொல்கின்றன. முதல் நாளில் இரண்டு 2.55 கோடி என்றாலும் சனி, ஞாயிறு என வார இறுதி நாட்கள் வருவதால் கண்டிப்பாக இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
கட்டா குஸ்தி 2 - பாசிடிவ் விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை மாறன்